குறள் 531:
இறந்த வெகுளியின் தீதே சிறந்த
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
உவகை மகிழ்ச்சியிற் சோர்வு
மு.வ உரை:
பெரிய உவகையால் மகிழ்ந்திருக்கும் போது மறதியால் வரும் சோர்வு, ஒருவனுக்கு வரம்பு கடந்த சினம் வருவதைவிடத் தீமையானதாகும்.
சாலமன் பாப்பையா உரை:
மிகுந்த மகிழ்ச்சிப் பெருக்கால் வரும் மறதி, அளவு கடந்த கோபத்தைக் காட்டிலும் கொடுமையானது.
கலைஞர் உரை:
அகமகிழ்ச்சியினால் ஏற்படும் மறதி, அடங்காத சினத்தினால் ஏற்படும் விளைவை விடத் தீமையானது.
திருக்குறளின் மு.வ உரை சரியாக புரியவில்லை. சில குறல்களின் விளக்கவுரை மூன்று பேரும் வெறுபடுகின்றனர். இந்த மூவரை தவிர வேறு ஒருவர் எழுதிய மக்களுக்கு புரியுமாறு இருகஜும் விளக்கவுரையை பதிவிட்டால் நலம்