குறள் 506

குறள் 506:

 

அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர்
பற்றிலர் நாணார் பழி
மு.வ உரை:
சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார்.
சாலமன் பாப்பையா உரை:
உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு வெட்கப்படவுமாட்டார்.
கலைஞர் உரை:

நெறியற்றவர்களை ஒரு பணிக்குத் தேர்வு செய்வது கூடாது அவர்கள் உலகத்தைப் பற்றிக் கவலைப்படாமல், பழிக்கு நாணாமல் செயல்படுவார்கள்


Kural 506


Atraarai Therudhal Ombuga Matravar
Patrilar Naanaar Pazhi

Kural Explanation: Let (a king) avoid choosing men who have no relations; such men have no attachment, and thereforehave no fear of crime

1 thought on “குறள் 506”

 1. இது ஆராயத்தக்க குறள்.

  பற்றற்றவரை – உற்றார் உறவினர் இல்லாதவரை வேலைக்கு எடுத்தா – பழி பாவத்துக்கு அஞ்சமாட்டாங்கன்னு எந்த அர்த்தத்துல சொல்றார்.

  Safety போஸ்டர்ல இப்படி ஒன்னு இருக்கும்.
  உங்கள் அன்புக்குரியவர்கள் வீட்டில் இருக்கிறார்கள், வேலையில் கவனமா இருங்க – அப்படின்னு
  So. வேலைல – கவனம் – பிடிப்பு வேணும்னா – யாரோ (குடும்பம்)வீட்ல இருக்கணும் அந்த மாதிரியா!

  அம்மா – நீ எங்கயோ நல்லா இருக்கற என்னும் ஆறுதல்ல தான் நான் இங்க மகிழ்வோடு இருக்கறேன்னு மகன் – வெளிநாட்டுல இருந்து சொல்ற மாதிரியா?

  🤔

  Reply

Leave a Comment