குறள் 210
குறள் 210: அருங்கேடன் என்ப தறிக மருங்கோடித் தீவினை செய்யான் எனின் மு.வ உரை: ஒருவன் தவறான நெறியில் சென்று தீயசெயல் செய்யாதிருப்பானானால் அவன் கேடு இல்லாதவன் என்று அறியலாம். சாலமன் பாப்பையா உரை: தீய வழிகளில் பிறர்க்குத் தீமை செய்யாது வாழ்பவனே கேடு இல்லாதவன் என்று அறிக. கலைஞர் உரை: வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்க.