குறள் 361
குறள் 361: அவாவென்ப எல்லா உயிர்க்குமெஞ் ஞான்றுந் தவாஅப் பிறப்பீனும் வித்து மு.வ உரை: எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர். சாலமன் பாப்பையா உரை: எல்லா உயிர்களுக்கும், எந்தக் காலத்திலும் அழியாமல் வரும் பிறப்பை உண்டாக்கும் விதைதான் ஆசை என்று பெரியோர் கூறுவர். கலைஞர் உரை: ஆசையை, எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றி முளைக்கும் விதை என்று கூறலாம்