குறள் 161
குறள் 161: ஒழுக்காறாக் கொள்க ஒருவன்தன் நெஞ்சத் தழுக்கா றிலாத இயல்பு மு.வ உரை: ஒருவன் தன் நெஞ்சில் பொறாமை இல்லாமல் வாழும் இயல்பைத் தனக்கு உரிய ஒழுக்க நெறியாகக் கொண்டு போற்ற வேண்டும். சாலமன் பாப்பையா உரை: உள்ளத்துள் பொறாமை இல்லாமல் வாழும் குணத்தை, ஒருவன் தனக்கு உரிய ஒழுக்கமாகக் கொள்க. கலைஞர் உரை: மனத்தில் பொறாமையில்லாமல் வாழும் இயல்பை ஒழுக்கத்திற்குரிய நெறியாகப் பெற்று விளங்கிட வேண்டும்.