குறள் 250
குறள் 250: வலியார்முன் தன்னை நினைக்கதான் தன்னின் மெலியார்மேற் செல்லு மிடத்து மு.வ உரை: (அருள் இல்லாதவன் ) தன்னை விட மெலிந்தவர் மேல் துன்புறுத்த செல்லும் போது, தன்னை விட வலியவரின் முன் தான் அஞ்சி நிற்கும் நிலைமையை நினைக்க வேண்டும். சாலமன் பாப்பையா உரை: அருள் இல்லாதவள், தன்னைவிட எளிய மனிதரைத் துன்புறுத்தச் செல்லும்போது, தன்னைவிட பலசாலி தன்னைத் துன்புறுத்த வந்தால் அவருக்கு முன் தான் அஞ்சி நிற்பதாக எண்ணிப் பார்க்க. கலைஞர் உரை: … Read more