குறள் 837

குறள் 837:

 

ஏதிலார் ஆரத் தமர்பசிப்பர் பேதை
பெருஞ்செல்வம் உற்றக் கடை
மு.வ உரை:
பேதை பெருஞ் செல்வம் அடைந்த போது (அவனோடு தொடர்பில்லாத) அயலார் நிறைய நன்மை பெற, அவனுடைய சுற்றத்தார் வருந்துவர்.
சாலமன் பாப்பையா உரை:
அறிவற்றவன் பெருஞ்செல்வத்தை அடைந்தபோது பிறர் அதை அனுபவிக்க, அவன் உறவினர் பசித்திருப்பர்.
கலைஞர் உரை:

அறிவில்லாப் பேதைகளிடம் குவியும் செல்வம், அயலார் சுருட்டிக் கொள்ளப் பயன்படுமேயல்லாமல் பசித்திருக்கும் பாசமுள்ள சுற்றத்தாருக்குப் பயன்படாது.


Kural 837


Edhilaar Aarath Thamarpasippar Pedhai
Perunjchelvam Utra Kadai

Kural Explanation: If a fool happens to get an immense fortune, his neighbours will enjoy it while his relations starve

Leave a Comment