தெரிந்து தெளிதல்

குறள் 510

குறள் 510:   தேரான் தெளிவுந் தெளிந்தான்கண் ஐயுறவும் தீரா இடும்பை தரும் மு.வ உரை: ஒருவனை ஆராயாமல் தெளிவடைதலும், ஆராய்ந்து தெளிவடைந்த ஒருவனிடம் ஐயப்படுதலும் ஆகிய இவை நீங்காதத் துன்பத்தைக் கொடுக்கும். சாலமன் பாப்பையா உரை: ஒருவனை ஆராயாமல் பதவியில் அமர்த்துவதும், அமர்த்தியபின் அவன்மீதே சந்தேகம் கொள்வதும் நீங்காத துன்பத்தைத் தரும். கலைஞர் உரை: ஆராயாமல்…
Read more

குறள் 509

குறள் 509:   தேறற்க யாரையுந் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள் மு.வ உரை: யாரையும் ஆராயாமல் தெளியக்கூடாது, நன்றாக ஆராய்ந்த பின்னர் அவரிடம் தெளிவாகக் கொள்ளத்தக்க பொருள்களைத் தெளிந்து நம்ப வேண்டும். சாலமன் பாப்பையா உரை: எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா. கலைஞர் உரை:…
Read more

குறள் 508

குறள் 508:   தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும் மு.வ உரை: மற்றவனை ஒன்றும் ஆராயாமல் தெளிந்தால் அஃது (அவனுக்கு மட்டும் அல்லாமல்) அவனுடைய வழிமுறையில் தோன்றினவருக்கும் துன்பத்தைக் கொடுக்கும். சாலமன் பாப்பையா உரை: நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத்…
Read more

குறள் 507

குறள் 507:   காதன்மை கந்தா அறிவறியார்த் தேறுதல் பேதைமை எல்லாந் தரும் மு.வ உரை: அறியவேண்டியவற்றை அறியாதிருப்பவரை அன்புடைமை காரணமாக நம்பித்தெளிதல், (தெளிந்தவர்க்கு) எல்லா அறியாமையும் கெடும். சாலமன் பாப்பையா உரை: அறியவேண்டியவற்றை அறியாதவர்களை அவர்கள் மீதுள்ள அன்பு காரணமாகப் பதவியில் அமர்த்துவது அறியாமை பலவற்றையும் தரும். கலைஞர் உரை: அறிவில்லாதவரை அன்பு காரணமாகத் தேர்வு…
Read more

குறள் 506

குறள் 506:   அற்றாரைத் தேறுதல் ஓம்புக மற்றவர் பற்றிலர் நாணார் பழி மு.வ உரை: சுற்றத்தாறின் தெடர்பு அற்றவரை நம்பித் தெளியக்கூடாது, அவர் உலகத்தில் பற்று இல்லாதவராகையால் பழிக்கு நாண மாட்டார். சாலமன் பாப்பையா உரை: உறவு பலம் இல்லாதவரைப் பதவிகளுக்குத் தெரிவு செய்வதைத் தவிர்க்கவும் ஏன் எனில், அவர்களுக்குப் பந்த பாசம் இல்லை. பழிக்கு…
Read more

குறள் 505

குறள் 505:   பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்குந் தத்தங் கருமமே கட்டளைக் கல் மு.வ உரை: (மக்களுடைய குணங்களாலாகிய) பெருமைக்கும் (குற்றங்களாலாகிய) சிறுமைக்கும் தேர்ந்தறியும் உரைக் கல்லாக இருப்பவை அவரவருடைய செயல்களே ஆகும். சாலமன் பாப்பையா உரை: உயர்ந்த குணத்தையும் சிறுமைக் குணத்தையும் உரசிக்கண்டு அறிவதற்கு ஏற்றக் கட்டளைக்கல் அவரவர் செய்யும் செயல்களே. கலைஞர் உரை: ஒருவர்…
Read more

குறள் 504

குறள் 504:   குணநாடிக் குற்றமு நாடி அவற்றுள் மிகைநாடி மிக்க கொளல் மு.வ உரை: ஒருவனுடைய குணங்களை ஆராய்ந்து, பிறகு குற்றங்களையும் ஆராய்ந்து, மிகுதியானவை எவையென ஆராய்ந்து, மிகுந்திப்பவற்றால் தெளிந்து கொள்ள வேண்டும். சாலமன் பாப்பையா உரை: ஒருவனின் குணங்களை ஆராய்ந்து அவனிடம் இருக்கும் குற்றங்களையும் ஆராய்ந்து இரண்டிலும் எவை அதிகமாக இருக்கின்றன என்பதையும் ஆராய்ந்து…
Read more

குறள் 503

குறள் 503:   அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால் இன்மை அரிதே வெளிறு மு.வ உரை: அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும். சாலமன் பாப்பையா உரை: அரிய நூல்களை எல்லாம் கற்று குற்றம் ஏதும் இல்லாதவரே எனினும் கூர்ந்து பார்த்தால் அவரிடமும் அறியாமை இல்லாமல் இராது. கலைஞர்…
Read more

குறள் 502

குறள் 502:   குடிப்பிறந்து குற்றத்தின் நீங்கி வடுப்பரியும் நாணுடையான் கட்டே தெளிவு மு.வ உரை: நல்லகுடியில் பிறந்து குற்றங்களிலிருந்து நீங்கிப் பழியாச் செயல்களைச் செய்ய அஞ்சுகின்ற நாணம் உடையவனையே நம்பித் தெளிய வேண்டும். சாலமன் பாப்பையா உரை: நல்ல குடும்பத்தில் பிறந்து குற்றம் ஏதும் இல்லாதவனாய்ப் பழிக்கு அஞ்சி, வெட்கப்படுபவனையே பதவிக்குத் தெரிவு செய்யவேண்டும். கலைஞர்…
Read more

குறள் 501

குறள் 501:   அறம்பொருள் இன்பம் உயிரச்சம் நான்கின் திறந்தெரிந்து தேறப் படும் மு.வ உரை: அறம், பொருள், இன்பம், உயிர்காக அஞ்சும் அச்சம் ஆகிய நான்கு வகையாலும் ஆராயப்பட்ட பிறகே ஒருவன் (ஒரு தொழிலுக்கு உரியவனாகத்) தெளியப்படுவான். சாலமன் பாப்பையா உரை: அறத்தைக் காக்க அரசைக் கவிழ்ப்போம், சம்பள உயர்வு தராத அரசைக் கவிழ்ப்போம், உனக்காகவே…
Read more